close
Choose your channels

நடிகை கைரா அத்வானி எடுத்த உச்சகட்ட ரிஸ்க்: வைரல் வீடியோ

Tuesday, June 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கைரா அத்வானி எடுத்த உச்சகட்ட ரிஸ்க் ஒன்றின் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’எம்எஸ் தோனி’ திரைப்படத்தில் சாக்சி கேரக்டரில் நடித்தவரும், மகேஷ்பாபு நடித்த ’பாரத் அனே நேனு’ உள்பட பல பாலிவுட் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் கைரா அத்வானி. இவர் உடற்பயிற்சி செய்வதில் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பதும் அவரது உடற்பயிற்சி குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது பயிற்சியாளரின் தலையில் வைத்துள்ள தொப்பியை காலால் பின்பக்கமாக எட்டி உதைக்கும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சற்று பிசகினாலும் பயிற்சியாளரின் முகத்தில் கால் பட்டுவிடும் ஆபத்து இருந்தும் அவர் உச்சகட்ட ரிஸ்க் எடுத்து பயிற்சியாளருக்கு சிறு காயமும் ஏற்படாமல் வெற்றிகரமாக இந்த பயிற்சியை முடித்துள்ளார்.

இது குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்த பயிற்சியாளர் அவர்களுக்கு தனது நன்றி என்றும் கைரா அத்வானி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment