அண்ணி ஜோதிகாவின் வெறித்தனமான வொர்க்-அவுட் .. கார்த்தியின் கமெண்ட் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,June 25 2023]

நடிகை ஜோதிகா கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த வீடியோவை பார்த்து பல திரை உலக பிரபலங்கள் ஆச்சரியமடைந்து கமெண்ட்ஸ் பதிவு செய்தனர் என்பதை பார்த்தோம்

குறிப்பாக ராதிகா சரத்குமார். ஐஸ்வர்யா ராஜேஷ். அனிதா சம்பத். உள்ளிட்ட பலர் அவருடைய வீடியோவுக்கு கமெண்ட்ஸ்களை பதிவு செய்திருந்தனர். மேலும் இந்த வீடியோவுக்கு 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்திருந்தது.

இந்த நிலையில் சூர்யாவின் சகோதரர் கார்த்தி இந்த வீடியோவை பார்த்து ’சரியான பீஸ்ட் மோட் அண்ணி’ என்று கமெண்ட் செய்து உள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஜோதிகா ’நன்றி கார்த்தி! இந்த நிலைமைக்கு வர பத்து மாதங்கள் ஆனது’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சூர்யா, கார்த்தியின் சகோதரி பிருந்தா இந்த வீடியோவுக்கு ’மைண்ட் புளோயிங்.. உங்களிடம் ஏராளமான பவர் உள்ளது’ என்று பதிவு செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஜோதிகா ’இதுதான் உண்மையான பெண்களின் பவர் பிருந்தா’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.