close
Choose your channels

ஓ மை காட்.. என்ன ஒரு பவர்.. மீண்டும் வைரலாகும் ஜோதிகாவின் வொர்க்-அவுட் வீடியோ..!

Friday, June 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜோதிகாவின் வொர்க்-அவுட் வீடியோ வைரலான நிலையில் தற்போது மீண்டும் அவர் கடினமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் ரீஎண்ட்ரி யான ஜோதிகா தற்போது கூட மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் இரண்டு ஹிந்தி படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது ஜோதிகா வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் பளுதூக்குதல் உள்பட கடினமான வொர்க்-அவுட் செய்வதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த வீடியோவுக்கு நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் மாதவன் உள்பட பலர் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment