இன்ஸ்டாகிராம் வந்த ஜோதிகா: முதல் போஸ்ட்டே அட்டகாசம்!

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி உள்ள நிலையில் முதல் போஸ்ட்டே அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகை ஜோதிகா முதல் முறையாக சமூகவலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கியுள்ளார். தன்னுடைய லாக்டவுன் நினைவுகளை பாசிட்டிவ் ஆக பதிவு செய்ய இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

முதல் பதிவாக அவர் இமயமலையில் தேசியக் கொடியை ஏந்திய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் காஷ்மீரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மிகவும் அபூர்வமானது என்றும் தனது நண்பர்களுடன் இணைந்து எடுத்த இந்தப் புகைப்படம் தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் ஜோதிகா இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய முதல் நாளிலேயே அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஜோதிகா ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இதில் அவரது சகோதரராக சசிகுமார் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கர்நாடகாவில் பயங்கர விபத்து.....! திமுக எம்.எல்.ஏ. மகனுடன் 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.....!

கர்நாடக பகுதியில் அதிவேகமாக கார் சென்றுகொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்ததில்

என் தாயகமே உனக்கு ஏன் வேதனை? ஆப்கன் வலியை வரிகளாய் வடித்துவிட்ட பாடகர்!

ஆப்கானிஸ்தானில் இன்னும் ஒரு சில தினங்களில் தாலிபான்கள் ஆட்சி அமைக்கவுள்ளனர்.

பாராலிம்பிக் போட்டியில் இன்று பதக்க வேட்டை நடத்திய இந்திய வீரர்கள்!

மாற்றுத் திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

17 வயதில் மாடலிங் செய்த உலகநாயகன் மகள்… இணையத்தைக் கலக்கும் க்யூட் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மற்றும் இளைய மகள்கள் இருவருமே தற்போது நடிப்பு துறையில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்

பனை ஓலை தொட்டில்கள்.....! குமரி மக்கள் அதிகம் விரும்ப காரணம் என்ன....?

கன்னியாகுமரி மாவட்டத்தில் பனை ஓலை தொட்டில்களை மக்கள் அதிகம் விரும்பி, பயன்படுத்திவருகிறார்கள். இந்த செய்திகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது