தலைகீழா நின்னு என்ன செய்றார் ஜோதிகா.. ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,April 28 2023]

நடிகை ஜோதிகா தலைகீழாக நின்று ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா என்பதும் அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிகா அதன் பின் தற்போது மீண்டும் தனக்கேற்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் ஜோதிகா அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தலைகீழாக நின்று ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

44 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா உடலை செம ஃபிட்டாக வைத்திருக்கிறார் என்று அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக அவர் தலைகீழா படிக்கட்டில் இறங்கி வருவது, தலைகீழாக சக்கரத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பது ஆகியவற்றை பார்க்கும் போது ’வாவ்’ என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.