என்ன ஆச்சு ஜான்வி கபூருக்கு? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுவது நசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ’தேவாரா’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். மேலும் அவர் நடித்த ’உலாஜ்’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திடீரென ஜான்வி கபூர், புட் பாய்சன் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து படப்பிடிப்பு மற்றும் ப்ரோமோஷன் பணிகளை ரத்து செய்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவருடைய உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததை அடுத்து இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் இன்று மாலை அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் வழக்கம் போல் தனது ப்ரோமோஷன் மற்றும் படப்பிடிப்பை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com