80களின் கனவுக்கன்னி ஜெயமாலினி வீட்ல விசேஷம்.. பீச் ரிசார்ட்டில் பிரமாண்டமான ஏற்பாடு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் 80களின் கனவு கன்னியான ஜெயமாலினியின் ஒரே மகன் திருமணம் வரும் 23ஆம் தேதி சென்னை அருகே உள்ள பீச் ரிசார்ட்டில் நடைபெற இருப்பதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சிவாஜி கணேசன் நடித்த ’டாக்டர் சிவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயமாலினி. அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக அவர் நடித்த விட்டாலாச்சார்யாவின் ’ஜெகன்மோகினி’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற பிரபல நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரி பார்த்திபன் என்பவரை ஜெயமாலினி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஷாம் என்ற ஒரு மகன் இருக்கும் நிலையில் தற்போது அவருடைய திருமணம் நடைபெற உள்ளது.
ஜெயமாலினி மகன் ஷாம் திருமணம் சென்னை பீச் ரிசார்ட்டில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருவதாகவும் இந்த திருமணத்தில் தமிழ் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments