பாஜகவில் இணைந்த விஜய் பட நடிகை
- IndiaGlitz, [Wednesday,November 06 2019]
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறிவரும் அரசியல்வாதிகள் அதிகரித்து வருகின்றனர். அதேபோல் திரை உலகில் இருந்தும் அரசியல் கட்சியில் இணையும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் கட்சியை சேர்ந்த 3 பேர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று விஜய்யின் 'வேட்டைக்காரன்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார்
இந்த நிலையில் நடிகை ஜெயலட்சுமி இன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். நடிகை ஜெயலட்சுமி பாஜகவில் இணைந்தது குறித்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது:திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி, இன்று தன்னை தமிழக பாஜகவில் இனைத்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார்' என்று பதிவு செய்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற நடிகை விஜய் நடித்த வேட்டைக்காரன் மற்றும் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம்23, நோட்டா உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஒருசில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும்,வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி அவர்கள் இன்று தன்னை @BJP4TamilNadu இனைத்துக் கொண்டார். பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார். pic.twitter.com/92ZVAUFL0P
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) November 6, 2019