சிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாரதவிலாஸ், பைலட் பிரேம்நாத் உள்ளிட்ட படங்களிலும், கமல்ஹாசன் நடித்த பட்டாம்பூச்சி, சினிமா பைத்தியம், தேன்சிந்துதே வானம், உள்ளிட்ட படங்களிலும், ரஜினிகாந்த் நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது, சதுரங்கம், வணக்கத்துக்குரிய வாத்தியாரே, போன்ற படங்களிலும் நடித்தவர் நடிகை ஜெயசித்ரா

தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களிலும் மலையாளம் கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்

இந்த நிலையில் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் என்பவர் இன்று திருச்சியில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜெயசித்ராவின் கணவரின் மறைவை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

நடிகை ஜெயசித்ரா கடந்த 1983-ம் ஆண்டு கணேஷை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயசித்ரா-கணேஷ் தம்பதிக்கு அம்ரேஷ் என்ற மகன் உள்ளார் என்பதும் இவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை!

ஒருபக்கம் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு சூர்யா உதவி செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் உழவன் பவுண்டேஷன் மூலம் கார்த்தி உழவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

டாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்!!!

நாட்டின் டாப் 10 காவல் நிலையப் பட்டியலில் சேலம் சூரமங்கலம் பகுதியில் இயங்கி வரும் காவல் நிலையம் 2 ஆவது இடத்தைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்து இருக்கிறது.

தமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதை உறுதி செய்த நிலையில் அதிமுக பிரபலமும், முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி

சற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும், கட்சியை ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் இன்று அறிவித்தார்

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்து வருவது போல் தற்போது நடிகை பார்வதி நாயரும் நாயகிக்கு