கமல், ரஜினி பட நடிகை வீட்டில் நகைகள் திருட்டு: 2 பேர் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’, உலகநாயகன் கமலஹாசன் நடித்த ’மைக்கேல் மதன காமராஜன்’, ரஜினி கமல் இருவரும் இணைந்து நடித்த ’அலாவுதீனும் அற்புத விளக்கும்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெயபாரதி. இவர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக தன்னுடைய நகைகளை எடுக்க லாக்கரை திறந்தபோது, நகைகள் காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் இந்த நகைகளை அவரது வீட்டில் வேலை பார்த்த காவலாளி மற்றும் டிரைவர் ஆகிய இருவரும் இணைந்து திருடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதனை அடுத்து இருவருக்கும் வலைவீசிய போலீசார் கார் டிரைவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் அமைந்தகரையில் உள்ள ஒரு அடகு கடையில் நகைகளை விற்றது தெரியவந்தது. இதனை அடுத்து காவலாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரபல நடிகை ஒருவர் வீட்டில் அவரது வீட்டின் காவலாளி மற்றும் டிரைவரே கூட்டாளியாக இருந்து நகைகளை திருடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout