சிம்பிள் மேக்கப்பில் ஸ்ரீதேவியை நினைவூட்டிய ஜான்வி கபூர்… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் 80கள் முதல் கொடிக்கட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஆதிக்கம் மிகுந்த நடிகையாகவே வலம் வந்தார். தமிழைத் தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி எனப்பல மொழி சினிமாக்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கிட்டத்தட்ட இந்தியப் பிரபலங்களுடன் ஒருவராக இருந்தார்.
பின்னர் நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானது முதல் நட்சத்திர ஹோட்டலில் இறந்ததுவரை அனைத்தும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். அவரது இழப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கடுமையாகப் பாதித்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர்.
“தடக்” எனும் பாலிவுட் சினிமா மூலம் அறிமுகமான நடிகை ஜான்வி கபூர் தற்போது இந்தி சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளார். மேலும் இவர் இயக்குநர் சித்தார்த சென்குப்தா இயக்கத்தில் ‘’Good luck Jerry’’ எனும் திரைப்படத்துள்ள இணைந்துள்ள இவர் ‘’Dostana 2’’. ‘’Bombay Girls’’, ‘’Takht’’, ‘’Ranbhoomi’’ போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
கொரோனா நேரத்தில் மாலத்தீவு சென்ற இவர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவுசெய்து இருந்தார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர் சிம்பிளான மேக்கப் போட்டுக் கொண்டு சேலை உடுத்தி போட்டோ ஷுட் எடுத்த புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்தப் புகைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் ஏறக்குறைய தனது அம்மா நடிகை ஸ்ரீதேவி போலவே இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான லைக்ஸ்குகளோடு இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments