நடிகை ஜாங்கிரி மதுமிதாவின் மகனா இவர்? க்யூட் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த க்யூட் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகின் காமெடி நடிகைகளில் ஒருவர் ஜாங்கிரி மதுமிதா என்பதும் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் என்பதும் தெரிந்ததே. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ வெற்றிக்கு பிறகு ’அட்டகத்தி’ ’ராஜா ராணி’, ‘காக்கி சட்டை’ ’காஞ்சனா 2’ ’டிமான்டி காலனி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான ’காட்டேரி’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் நடிகை ஜாங்கிரி மதுமிதா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரான மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் இந்த குழந்தையின் புகைப்படத்தை சற்று முன் ஜாங்கிரி மதுமிதா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
’பொம்மையோட டிரஸ்க்குள்ள பொம்மை’ என்ற கேப்ஷனுடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com