கொரோனா நேரத்தில் பிசினஸ் பக்கம் தாவிய தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Friday,August 06 2021]

தமிழ் சினிமாவில் “அவன் இவன்”, “தெகிடி” போன்ற ஒரு சில படங்களில் நடித்து வரவேற்பு பெற்றவர் நடிகை ஜனனி ஐயர். இவர் மலையாள சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். “பிக்பாஸ் சீசன் 2“ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானதும் குறிப்பிட்டத்தக்கது.

இதைத்தவிர நடிகை ஜனனி ஐயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பல நூற்றுக்கணக்கான விளம்பரப் படங்களில் மாடலாக நடித்துள்ளார். இந்த அனுபவத்தின் காரணமாக தற்போது தனது சகோதரியுடன் இணைந்து பேஷன் உடைகளை விற்கும் ஆன்லைன் இணையதளம் ஒன்றை துவங்கி இருக்கிறார்.

துபாய், சிங்கப்பூர், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட தேர்ந்த உடைகளை The Hazel Avenue எனும் இணையத்தளத்தில் விற்பனை செய்துவருகிறார். கூடவே தனது விற்பனை உடைகளுக்கு இவரே விளம்பர மாடல். இவரின் ரெகுலர் கஸ்டமர்களாக நடிகை பிரியா பவானி சங்கர், ஆல்யா போன்ற பிரபலங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நேரத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் இதுபோன்ற பிசினஸ்களில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். சீரியல் நடிகைகள், நகைச்சுவை நட்சத்திரங்கள் சிலர் யூடியூப் பக்கங்களை உருவாக்கி அதில் சம்பாதிப்பதையும் தற்போது வாடிக்கையாக்கி விட்டனர். அந்த வகையில் நடிகை ஜனனி ஐயரின் புது முயற்சிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

தாய்ப்பால் கொடுத்த அனுபவம்: நடிகர் நகுல் மனைவியின் உருக்கமான தகவல்!

நடிகர் நகுல் மற்றும் ஸ்ருதி தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. இந்த குழந்தைக்கு தற்போது ஒரு வயது முடிந்துள்ளதை அடுத்து

செம்பருத்தி நாயகிக்கும், செழியனுக்கும் விரைவில் டும் டும் டும் .....!

அண்மையில் சின்னத்திரை நடிகை ஷபானாவும், நடிகர் ஆர்யனும் காதலித்து வருவதாக செய்திகள் சமூகவலைத்தளங்களில் உலாவி வந்தன

ஜிபி முத்து கொலை மிரட்டல் விடுகிறார்....! காதல் சுகுமார் போலீசில் புகார்....!

இணைய பிரபலமான ஜிபி. முத்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக காதல் சுகுமார் போலீசில் புகாரளித்துள்ளார்.

மெல்போர்ன் விருதுக்கு தேர்வாகியுள்ள சூர்யாவின் சூப்பர்ஹிட் படம்!

சூர்யா நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்று மெல்போர்ன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

இவர்கள் மூவரும் நாணயத்தின் மூன்று பக்கங்கள்: 30 ஆண்டு திரையுலக வாழ்வு குறித்து தல அஜித்!

தல அஜித் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாக இதனை கொண்டாடி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.