கொரோனா நேரத்தில் பிசினஸ் பக்கம் தாவிய தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Friday,August 06 2021]

தமிழ் சினிமாவில் “அவன் இவன்”, “தெகிடி” போன்ற ஒரு சில படங்களில் நடித்து வரவேற்பு பெற்றவர் நடிகை ஜனனி ஐயர். இவர் மலையாள சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். “பிக்பாஸ் சீசன் 2“ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானதும் குறிப்பிட்டத்தக்கது.

இதைத்தவிர நடிகை ஜனனி ஐயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே பல நூற்றுக்கணக்கான விளம்பரப் படங்களில் மாடலாக நடித்துள்ளார். இந்த அனுபவத்தின் காரணமாக தற்போது தனது சகோதரியுடன் இணைந்து பேஷன் உடைகளை விற்கும் ஆன்லைன் இணையதளம் ஒன்றை துவங்கி இருக்கிறார்.

துபாய், சிங்கப்பூர், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட தேர்ந்த உடைகளை The Hazel Avenue எனும் இணையத்தளத்தில் விற்பனை செய்துவருகிறார். கூடவே தனது விற்பனை உடைகளுக்கு இவரே விளம்பர மாடல். இவரின் ரெகுலர் கஸ்டமர்களாக நடிகை பிரியா பவானி சங்கர், ஆல்யா போன்ற பிரபலங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நேரத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் இதுபோன்ற பிசினஸ்களில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். சீரியல் நடிகைகள், நகைச்சுவை நட்சத்திரங்கள் சிலர் யூடியூப் பக்கங்களை உருவாக்கி அதில் சம்பாதிப்பதையும் தற்போது வாடிக்கையாக்கி விட்டனர். அந்த வகையில் நடிகை ஜனனி ஐயரின் புது முயற்சிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.