நட்பின் அடிப்படையில் படுக்கையறை வரை சென்ற நடிகை.. இப்போது சிறையில் கம்பி எண்ணும் சோகம்..!

  • IndiaGlitz, [Monday,March 04 2024]

சினிமா நடிகை ஒருவர் நட்பின் அடிப்படையில் தனது தோழி ஒருவரின் படுக்கையறை வரை சென்ற நிலையில் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள பிரசாத் பாபு என்பவர் வீட்டில் கடந்த மாதம் திடீரென கிலோ கணக்கில் தங்கம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தேகத்திற்குரியவர்கள் யார் யார் என்று விசாரணை செய்த நிலையில் அவரது வீட்டிற்கு அடிக்கடி நடிகை சௌமியா என்பவர் வந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

பிரசாத் பாபுவின் மகள் மௌனியாவின் தோழியான இவர் அடிக்கடி தனது தோழியை பார்க்க வருவார் என்றும் அப்போது படுக்கையறையை கூட பயன்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது. பல மணி நேரமாக அவர் படுக்கை அறையில் இருந்த போது தான் அவர் எங்கள் வீட்டின் படுக்கை அறையில் உள்ள லாக்கரை எப்படி திறப்பது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் இருப்பதாக பிரசாத் பாபு காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் சௌமியாவை தேடி வந்த நிலையில் அவர் கோவாவில் இருப்பதாக தகவல் வந்தது. உடனே கோவா சென்று போலீசார் அவரை கைது செய்த நிலையில் வெறும் 75 கிராம் மட்டுமே அவர் வைத்திருந்ததாகவும் மீதமுள்ள நகைகள் என்ன ஆனது என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் போலீசார் தீவிரமாக விசாரித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சினிமா நட்சத்திர மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமடைந்த சௌமியா தற்போது திருட்டு வழக்கில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

'வேட்டையன்' படப்பிடிப்பில் முதல் நாள்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முதல் நாள் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக

'பார்க்கிங்' பட பாணியில் பிரச்சனை.. 'வேட்டையன்' பட நடிகரின் மகன் கடத்தல்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

சமீபத்தில் வெளியான ஹரிஷ் கல்யாண் நடித்த  'பார்க்கிங்' பட பாணியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் 'வேட்டையன்' பட நடிகரின் மகனை கடத்தி சென்று சரமாரியாக தாக்கி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை

இப்போதைக்கு அப்டேட் கேட்காதீங்க.. காரணம் சொன்ன 'கோட்' இயக்குனர் வெங்கட் பிரபு..!

வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் கேட்டு படக்குழுவினர்களை

இயக்குனரும் வெளியேறி விட்டார்.. இனி 'குக் வித் கோமாளி' அவ்வளவு தானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சிக்கு வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும்

வெட்கக்கேடு!  இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.. பிரபல நடிகை ஆவேசம்..

வெட்கக்கேடு! இந்தியர்கள் தங்கள் வீட்டு பெண்களை நடத்துவது போல வெளிநாட்டவர்களை நடத்தி வரும் நிலையில் ஒரு சிலரால் இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது