நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

நடிகை ஐஸ்வர்யா தனது மகளுடன் ஆட்டம்போடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா என்பது தெரிந்ததே. தமிழில் ’மீரா’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் என்பதும், அதன் பின்னர் அவர் ராசுகுட்டி, எஜமான், மக்களாட்சி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா கடந்த 1994ஆம் ஆண்டு தன்வீர் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு அனைனா என்ற மகள் கடந்த 1995 ஆம் ஆண்டு பிறந்தார் என்பதும் மகள் பிறந்த ஒரே வருடத்தில் ஐஸ்வர்யா தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஐஸ்வர்யா தனது மகளுடன் எடுத்த வீடியோவை முதல்முறையாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.