close
Choose your channels

பாஜகவில் இணைந்தார் விஜய்-விஜயகாந்த் பட நாயகி

Monday, January 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் சினிமா நட்சத்திரங்கள் பலர் களத்தில் குதிக்க காத்திருக்கின்றனர். ஏற்கனவே ரஜினி, பிரகாஷ்ராஜ், மோகன்லால், அக்சயகுமார் ஆகியோர் அரசியல் களத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது பாஜகவில் பிரபல நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

விஜய் நடித்த 'நெஞ்சினிலே', விஜயகாந்த் நடித்த 'நரசிம்மா', அகத்தியன் இயக்கிய 'காதல் கவிதை போன்ற தமிழ்ப்படங்களிலும் பல தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்த நடிகை இஷா கோபிகர் நேற்று பாஜகவில் இணைந்தார்.

நேற்று மும்பையில் நடந்த விழா ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி முன்னிலையில் இஷா கோபிகர் பாஜகவில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது அவர் நாடு முழுவதும் பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க தீவிர பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment