வாரிசு நடிகையின் விவாகரத்து முடிவு.. அப்பா எதிர்ப்பு, அம்மா ஆதரவு..!
- IndiaGlitz, [Sunday,February 18 2024]
பிரபல நட்சத்திர ஜோடியின் வாரிசு நடிகை தனது கணவரை பிரிய முடிவு செய்துள்ள நிலையில் அவரது முடிவுக்கு அவரது அம்மா ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ஆனால் அவரது அப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் திரை உலகின் நட்சத்திர ஜோடி ஆன தர்மேந்திரா - ஹேமாமாலினி மகள் இஷா தியோல் தனது கணவரை பிரிய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு இஷா தியோல், பரத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இஷா தியோல் விவாகரத்து செய்ய முடிவு எடுத்த நிலையில் அவருக்கு அவரது அம்மா ஹேமாமாலினி ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நடிகர் தர்மேந்திரா தனது மகள் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இஷா தியோல் தனது கணவரை பிரிவதாக எடுத்த முடிவு அவரது இரண்டு குழந்தைகளையும் பெரும் அளவு பாதிக்கும் என்று தெரிவித்த அவர் எந்த பெற்றோரும் தங்கள் மகள் கணவரை பிரிவதை விரும்ப மாட்டார்கள் என்றும் தனது மகளின் முடிவுக்கு தான் எதிராக இருக்கவில்லை என்றாலும், அவர் தன் முடிவை குழந்தைகளுக்காக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்
அப்பாவின் வேண்டுகோளை ஏற்று இஷா தியோல் தனது முடிவை மாற்றிக் கொள்வாரா? அல்லது விவாகரத்து செய்வதில் உறுதியுடன் இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.