மாம்பழ கூடையுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்த நடிகை!

ஒவ்வொரு தேர்தலின்போது அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்யும் நடிகர், நடிகைகளில் ஒருவர் நடிகை விந்தியா. மற்ற நட்சத்திரங்களின் பேச்சை விட இவருடைய பேச்சு ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என்பதால் இவருடைய பேச்சை கேட்க பெருங்கூட்டம் வருவதுண்டு. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை இவரை ஒவ்வொரு தேர்தலிலும் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் நடிகை விந்தியா தற்போது திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அதிலும் சும்மா இல்லை, கூடை நிறைய மாம்பங்களுடன் வந்து அதனை ஜெயலலிதா சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு அதன்பின்னர் அந்த மாம்பழங்களை அங்குள்ள பொதுமக்களுக்கு வழங்கினார்.

நடிகை விந்தியாவுக்கு ஆந்திராவில் மாம்பழ தோட்டம் ஒன்று இருப்பதாகவும், இந்த ஆண்டு அவருடைய தோட்டத்தில் மாம்பழங்கள் நல்ல விளைச்சல் என்பதால் தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை ஜெயலலிதா சமாதியில் வைத்து அவர் அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிகிறது. மேலும் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு ஆண்டும் தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்

ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்பதை இன்னும் இந்த சமூகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஒரு இளைஞர் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார்.

கார்த்தி படக்குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா!

கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்

நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து ஆபாச பதிவு செய்த பெண் கைது

நடிகர் விஷாலுடன் பள்ளிச்சிறுமி ஒருவரை ஆபாசமாக இணைத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்படியெல்லாம் நடக்காது, நடக்கவும் கூடாது: 'நேர் கொண்ட பார்வை டிரைலர்விமர்சனம்:

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

ராஜராஜ சோழன் விவகாரம்: முன்ஜாமீன் கேட்கும் ரஞ்சித்

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் என்ற பகுதியில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித், சோழ மன்னர் ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக சில கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் .