காதலரை அறிவிக்கும் முன் கர்ப்பத்தை அறிவித்த இலியானா. ரசிகர்கள் குழப்பம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை இலியானாவுக்கு அதிகாரப்பூர்வமாக திருமணம் நடந்ததாக இதுவரை செய்தி வெளியாகாத நிலையில் அவர் தனது கர்ப்பத்தை அறிவித்துள்ளது அடுத்து ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகை இலியானா என்பதும், அவர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகை இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்ததாகவும் ’அவர் எப்போதும் தனக்கு சிறந்த கணவராக இருப்பவர்’ என தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களுக்கு இடையே திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகாத நிலையில் திடீரென அவர்கள் நட்பு முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து நடிகை கத்ரீனா கைஃப் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவருடன் இலியானா டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென தனது கர்ப்பத்தை அறிவித்துள்ளார். காதலர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் கர்ப்பத்தை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவர் தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments