கர்ப்பமான நடிகை இலியானாவின் காதலர் இவர்தானா? செம டிவிட்ஸ் வைத்த வைரல் போஸ்ட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் நடிகை இலியானா டி குரூஸ் கணவர் அல்லது காதலர் பெயரைக் குறிப்பிடாமலேயே கர்ப்பமாக இருக்கும் தகவலை திடீரென சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்த நிலையில் அவருடைய காதலர் யார் என்ற ஆர்வத்தை வெளியிட்டு வந்தனர்.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு ‘தேவதாஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதே ஆண்டில் மகேஷ் பாபுவுடன் நடித்த ‘போக்கிரி’ திரைப்படம் வெற்றிப்பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் ‘கேடி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையானார். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி சினிமாக்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவந்த நடிகை இலியானா கடந்த 2012 இல் ‘பாஃபி’ எனும் பாலிவுட் சினிமாவில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமானார். அந்த வகையில் ‘ஹேப்பி எண்டிங்‘, ‘ருஷ்டம்’, ‘ரைடு‘ என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018 இல் வெளிநாட்டு புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை நடிகை இலியானா காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் கூறப்பட்டது. ஆனால் 2019 இல் அந்த காதல் முறிவடைந்த நிலையில் நடிகை கத்ரினா கைஃபின் சகோதரர் செபாஸ்டியன் என்பவரை காதலித்து வருவதாகவும் ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தன.
ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவராத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். வெறுமனே டி-ஷர்ட், மோதிரம், குழந்தைகளுக்கான பொருட்களுடன் என்று அவ்வபோது இன்ஸ்டாகிராமில் அவர் புகைப்படம் வெளியிட்டு வரும் நிலையில் நடிகை இலியானாவின் காதலர் யார் என்ற தகவலை அவர் இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகை இலியானா ஒரு நபருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனாலும் அந்த நபர் யார்? பெயர் என்ன? என்பது போன்ற தகவலை அவர் சொல்லாமல் டிவிஸ்டுடன் பதிவிட்டு இருக்கும் இன்ஸ்டா ஸ்டோரி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையடுத்து நடிகை இலியானாவின் காதலர் இவர்தானா? என்று ஆச்சர்யத்தை பகிர்நதுவரும் ரசிகர்கள் அவருடைய பெயரென்ன? என்பதுபோன்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments