படுக்கை அழைப்பு குறித்த இலியானாவின் பரபரப்பு பதில்

  • IndiaGlitz, [Wednesday,March 14 2018]

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தை வெளியே தைரியமாக தெரிவிக்கும் நடிகையின் திரையுலக  வாழ்க்கை அடியோடு அஸ்தனமாகிவிடும் என்று நடிகை இலியானா பரபரப்பாக கூறியுள்ளார்

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த 'நண்பன்' உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இலியானா. இவரிடம் சமீபத்தில் நடிகைகள் படுக்கைக்கு அழைப்பது குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படும் நடிகை, இதனை வெளியே கூறும்போது அவரது கேரியர் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதனாலேயே பல நடிகைகள் இதனை வெளியே சொல்வதில்லை. இது கோழைத்தனம் தான் என்றாலும் இது தான் உண்மை

ஒரு தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக ஒரு நடிகை என்னிடம் கூறி அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனை கேட்டார். ஆனால் நான் அவருக்கு எந்தவிதமாக ஆலோசனையையும் கூறவில்லை.  அந்த தயாரிப்பாளர் சொல்வதை கேட்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும், என் கருத்தை அவரிடம் திணிக்க முடியாது.

பெரிய நடிகர்களுக்கு வெளியே கடவுள் போன்ற இமேஜ் இருந்தாலும் உள்ளே அவர்களுக்கு இன்னொரு முகம் இருக்கின்றது. இந்த முகத்தை வெளியே கொண்டு வர அனைத்து நடிகைகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே முடியும்

More News

உலகப்புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

உலகம் முழுவதும் அறியப்பட்ட பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76

நடிகை ஹன்சிகா மீது பகீர் புகார்

ஹன்சிகா மீது அவரது மேனேஜர் முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

10வது மாடியில் விஐபிக்கள், பரதேசி போல் நடுரோட்டில் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள்

கடந்த சில நாட்களாகவே காவல்துறையை சேர்ந்தவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து அனைவரையும் அதிர்ச்சி அளித்து வருகிறது.

விக்ரம் மகனுடன் மகள் நடிப்பது உண்மையா? கவுதமி விளக்கம்

சீயான் விக்ரம் மகன் துருவ், இயக்குனர் பாலா இயக்கி வரும் 'வர்மா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கமல் கட்சியில் இணைகிறாரா தமிழிசை?

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.