கர்ப்பமான வயிற்றை வீடியோ எடுத்து வெளியிட்ட இலியானா..!

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

நடிகை இலியானா திருமணம் செய்து கொண்டதாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் தனது குழந்தையை பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இதையடுத்து அவருடைய கர்ப்பத்திற்கு காரணம் யார்? அவரது கணவர் யார்? என்பது குறித்த கேள்விகளை ரசிகர்கள் எழுப்பினர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமான வயிற்றை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இலியானா படுக்கையில் உட்கார்ந்து தேநீர் குடிப்பது போன்றும், அவர் எதிரில் ஒரு பூனை உட்கார்ந்திருப்பது போன்றும் உள்ளது. இதையடுத்து கேமிரா அவரது கர்ப்பமான வயிற்றை படம் பிடிப்பதோடு இந்த வீடியோ முடிவுக்கு வருகிறது.

நடிகை இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்ததாகவும் அதன் பின் திடீரென அந்த காதல் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து நடிகை கத்ரீனா கைஃப் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவருடன் இலியானா டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த காதல் குறித்து இருவரும் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நான் இன்னும் சாகல.. திரும்பி வருவேன்.. ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில்..!

ரசிகரின் ட்விட் ஒன்றுக்கு பதில் அளித்த இயக்குனர் செல்வராகவன் 'நான் இன்னும் சாகவில்லை அல்லது ரிட்டயர் ஆகவில்லை, கண்டிப்பாக திரும்ப வருவேன்' என்று பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'தி கேரளா ஸ்டோரி' பரபரப்புக்கு இடையே ஏஆர் ரஹ்மான் பகிர்ந்த வீடியோ.. குவியும் வாழ்த்துக்கள்..!

'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் இது குறித்த சட்ட

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் சூப்பர் அப்டேட்.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம்

ஆர்ப்பாட்டமில்லாத அழகினால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட நடிகை த்ரிஷா… பிறந்தநாள் இன்று!

தனது ஆர்ப்பாட்டமில்லாத அழகினாலும் ஸ்டைலான நடிப்பினாலும் தமிழ் ரசிகர்களை கிட்டத்தட்ட 24 வருடங்களாகக் கட்டிப்போட்டு வைத்திருப்பவர்தான் நடிகை த்ரிஷா.

ரூ.200 கோடியா? பிரமிக்க வைக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் நெக்லஸ் பற்றிய தகவல்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது சர்வதேச அளவில் பிரபலமாக அறியப்படுகிற நடிகை பிரியங்கா சோப்ரா