6 நாட்களுக்கு பின் குழந்தை பிறந்ததை அறிவித்த இலியானா.. க்யூட் புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Sunday,August 06 2023]

நடிகை இலியானாவுக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த க்யூட் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் இலியானா. தமிழில் ’கேடி’ ’நண்பன்’ உட்பட சில படங்களிலும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் திருமணம் ஆகாத இலியானா திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். இருப்பினும் அவரது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் அவ்வப்போது தனது கர்ப்பிணி புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் சற்றுமுன் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அதை விவரிக்க தனக்கு வார்த்தைகளே இல்லை என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது குழந்தையின் பெயர் ’KOA PHOENIX DOLAN’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தையின் முகத்தை காண்பிக்கும் வகையில் உள்ள புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை... பிக்பாஸ் பிரபலத்தின் மடியில் ரக்சிதா.. வைரல் வீடியோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், பிக்பாஸ் வீட்டில் விளையாடும் போது ஒருவருக்கு ஒருவர் போட்டியுடன், ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே

அஜித்தின் 'விடாமுயற்சி'யில் இந்த 4 பிரபலங்களும் உறுதி.. வேற லெவல் தகவல்கள்..!

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' என்ற படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பது

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த விக்னேஷ் சிவன்.. செம்ம வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம்

செம ஸ்டைலாக மாறிய சிம்பு.. 'எஸ்டிஆர் 48' படம் வேற லெவல் தான்..!

நடிகர் சிம்பு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தயாராக அவர் வெளிநாடு சென்றார் என்பதும் உடலை ஃபிட்டாகி திரும்பினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

விளையாட வேண்டிய வயதில்… கோடிக்கணக்கில் சம்பாதித்து ஓய்வுபெற்ற சிறுமி!!

என்னதான் வளர்ந்துவிட்ட தொழில்நுட்பக் காலக்கட்டமாக இருந்தாலும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பது என்பதையெல்லாம் நம்மால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.