பிரபல நடிகரின் அப்பாவிற்கு ஜோடியாகும் நடிகை இலியானா… வைரல் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கில் பிரபல நடிகராக இருந்துவரும் நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக நடிகை இலியானாவை நடிக்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை காஜர் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த படத்திற்கு அவருக்குப் பதிலாக படக்குழு இவரைத் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் நாகர்ஜுனா “கோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு முதலில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த நிலையில் அவர் தற்போது கர்ப்பம் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து கதாநாயகியை மாற்றிவிடலாம் எனப் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் இதற்காக பாலிவுட் நடிகை இலியானாவை நடிக்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இலியானா. “தேவதாசு“, “போக்கிரி“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகி இருந்தார். மேலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல்வேறு வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார். அடுத்து தமிழில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தளபதி விஜய் நடிப்பில் வெளியான “நண்பன்“ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப்போன நடிகையாக மாறினார்.
இதற்கிடையில் இந்தி சினிமாக்களிலும் நடிகை இலியானா முன்னணி நடிகையாகவே வலம்வந்தார். “பார்ஃபி” படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இன்றளவும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியில் இவர் நடித்திருக்கும் “அன்ஃபேர் அண்ட் லவ்லி“ எனும் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
தற்போது பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக “கோஸ்ட்’‘ திரைப்படத்தில் நடிகை இலியானா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. நடிகை நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி நடிகராகத் தற்போது வலம்வருகிறார். அதேபோல இவருடைய மருமகள்தான் நடிகை சமந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com