மாதவன் அடுத்த படத்தை இயக்கும் நடிகையின் கணவர்.. ஒரே படத்தில் 3 பிரபலங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மாதவன் பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த படத்தை பிரபல நடிகையின் கணவர் இயக்க இருப்பதாகவும் மாதவனுடன் இந்த படத்தில் 3 பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன், பாலிவுட் திரையுலகிலும் சில படங்கள் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அந்த வகையில் மாதவன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் என்பவர் இயக்க இருக்கிறார்.
இவர் தமிழில் ’கௌரவம்’ ’தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ உள்ளிட்ட சில படங்களிலும் மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடித்த நடிகை யாமி கௌதமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’தி சர்ஜிகல் ஸ்டிரைக் ’ ‘ஆர்ட்டிக்கிள் 360’ போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய நிலையில் தற்போது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் மாதவனுடன் ரன்வீர் சிங், சஞ்சய் தத் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
இந்த படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள ரன்வீர்சிங், ‘எனது அடுத்த பட அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு எனது நன்றி, எனது அடுத்த படத்தை தற்போது அறிவிக்கிறேன், இதுவரை எதிர்பார்க்காத சினிமா அனுபவமாக இந்த படம் இருக்கும் என்பதை நான் உறுதி கூறுகிறேன், நல்ல நோக்கத்தோடு எடுக்கப்படும் ஒரு மிகப்பெரிய த்ரில்லர் படமாக இந்த படம் உங்கள் முன் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய்தத், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
And Here We Come🔥
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 27, 2024
Directed by #AdityaDhar, this much-anticipated collaboration between #JioStudios and #B62Studios is all set to dazzle you with a stellar cast like never before.@RanveerOfficial @duttsanjay #AkshayeKhanna @ActorMadhavan @rampalarjun @AdityaDharFilms… pic.twitter.com/Ba1wumpklY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments