காலா பட நாயகியின் அட்டகாசமான போட்டோ ஷுட்… வேற லெவல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அரசியல் திரைப்படம் “காலா”. இத்திரைப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் உருவாக்கி இருந்தார். மேலும் 2 ஹீரோயின்களைக் கொண்டு இருந்த இந்தத் திரைப்படத்தில் ஒரு ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி நடித்து இருந்தார். அதோடு தமிழில் இவரது முதல் படம் என்பதாலும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பதாலும் ஹுமாவிற்குப் பெருத்த வரவேற்பு இருந்தது.

இந்த வரவேற்பை சிறிதும் குறைக்காத வகையில் நடிகை ஹுமா அட்டகாசமான நடிப்பை காலா படத்தில் கொடுத்து இருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் இவர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இவர் பாலிவுட் திரைப்படங்களிலே கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தற்போது சோனி லைவ் தொலைக்காட்சியில் இவரது “மகாராணி” தொடர் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது. இந்தச் சந்தோஷத்தில் இருக்கும் நடிகை ஹுமா தற்போது அட்டகாசமான போட்டோ ஷுட்டை நடத்தி அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டு உள்ளார்.

ஆரஞ்ச் வண்ணத்தில் ஆடை அணிந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. டெல்லி பல்கலைக் கழகத்தில் நடிப்பு பயிற்சி பெற்ற இவர் முதலில் தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் தலைக்காட்டி அடுத்து, அனுராக் காஷ்யப் படங்களில் சில முக்கியக் கதாபாத்திரங்களில் இடம்பெற்று தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் பாலிவுட் தவிர மலையாம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.