மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகையின் உடம்பில் இத்தனை தழும்புகளா? அதிர்ச்சி புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,July 07 2024]

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகையின் உடம்பில் இருக்கும் தழும்புகள் குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் சமீபத்தில் தனக்கு மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நோயிடம் தான் போராடி வருவதாகவும் விரைவில் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.

இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று நடிகை சமந்தா உள்படபல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் ரசிகர்களும் உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று பதிவு செய்திருந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஹினா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்பக புற்றுநோய் காரணமாக தனக்கு ஏற்பட்ட சில தழும்புகள் உள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். நீங்கள் இந்த புகைப்படத்தில் எதை பார்க்கிறீர்கள், என்னுடைய உடம்பில் உள்ள தழும்புகளையா? என் கண்களில் உள்ள நம்பிக்கை ஒளிகளையா?

இந்த தழும்புகள் என்னுடையவை, அதை நான் என்றும் வரவேற்கிறேன், நான் அடைய வேண்டிய முன்னேற்றத்தின் முதல் அறிகுறி அவைகள் தான், என் கண்களில் உள்ள நம்பிக்கை, என் ஆன்மாவின் பிரதிபலிப்பு, சுரங்கப்பாதையில் முடிவில் உள்ள ஒளியை என்னால் இனிமேல் காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை அடுத்து ஹினா கான் ஒரு தைரியமான பெண் என்றும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.