கிளாமரில் பட்டையைக் கிளப்பும் "காலா" பட நாயகியின் செம வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,June 28 2021]

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காலா. இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன வயது காதலியாக பாலிவுட் முன்னணி நடிகை ஹீமா குரோஷி நடித்து இருப்பார். இந்தியில் இவர் கேங்ஸ் ஆப் வசேப்பூர், ஹைவே, பத்லாபூர் போன்ற திரைப்படங்களில் போல்டான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை ஹீமா குரோஷி தமிழில் காலா படத்தில் நடித்து இருந்தார். தற்போது தல அஜித்தின் வலிமை திரைப்படத்திலும் இவர் இடம் பெற்றிருப்பதாகப் படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் Army of dead படத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார். அதோடு இவரது நடிப்பில் லீலா எனும் வெப் சீரிஸ் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படி பாலிவுட், ஹாலிவுட், வெப் சீரிஸ், தமிழ் எனப் படு பிசியாக கலக்கிக் கொண்டு இருக்கும் நடிகை ஹீமா குரோஷி கொரோனா நேரத்தில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவ்வபோது விதவிதமான போட்டோ ஷுட்களை நடத்தி அந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் முதல் முறையாக கிளாமர் கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் அவர் உடல் மெலிந்து இருப்பதோடு கிளாமரிலும் கலக்கி இருக்கிறார். நடிகை ஹீமா குரோஷியின் இந்தப் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

திமிறும் யானையோடு போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் நடிகை… வைரல் வீடியோ!

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை சாக்ஷி அகர்வ&

மீண்டும் இணையும் ஆர்யா-சக்தி செளந்திரராஜன்: 'டெடி 2' உருவாகிறதா?

ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான 'டெடி' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் ரசிகர்கள்

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி காலமானார்....!

தமிழ் சினிமாவிற்கு சந்திரலேகா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் ஜெமினி ராஜேஷ்வரி.

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு தளர்வுகள்.. எவையெல்லாம் இயங்கும்?

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் ஜுலை 5 ஆம் தேதி வரை பிறப்பி

மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின்: ஷங்கரின் நெகிழ்ச்சியான பதிவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா மற்றும் ரோகித் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தினார் என்பது தெரிந்ததே