கொரோனா தொற்றால் உயிரிழந்த பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி
- IndiaGlitz, [Saturday,April 11 2020]
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை ஹிலாரி ஹீத் என்பவர் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 74
இங்கிலாந்து நாட்டில் உள்ள லிவர்பூல் என்ற பகுதியில் பிறந்து வளர்ந்த ஹிலாரி ஹீத், கடந்த 1968-ம் ஆண்டு வெளிவந்த Witchfinder என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் ஒரு சில படங்களுக்கு அவர் பைனான்சியர் ஆகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 74 வயதில் திடீரென ஹிலாரி ஹீத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை அவருடைய மகன் அலெக்ஸ் வில்லியம்ஸ் அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா காரணமாக நடிகை ஹிலாரி ஹீத் உயிரிழந்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது