இந்தி பட வாய்ப்பு வந்தால் டீசர்ட்டை கழட்டிவிடுவார்கள்: பிக்பாஸ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக இந்தி மொழிக்கு எதிரான டீசர்ட்டுகளை அணிந்து திரையுலகினர் சிலர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஸ்தம்பித்து வருகின்றனர் என்பதும் இதுகுறித்த ஹேஷ்டேக்குகளை இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இதுகுறித்து நகைச்சுவை நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஆர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்... ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு.. அதனால பழிப்பது தவறு, விரும்பினால் படிப்போம்... இந்தி பட வாய்ப்பு வந்தால் டிசர்ட்டை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள், ஜாக்கிரதை’ என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை ஆர்த்தி இன்னொரு டுவிட்ட்டில், ‘இந்திய மொழிகளில் ஒன்று இந்தி, அது வேண்டானு எதிர்பீங்க, ஆனா எங்கேயோ இருந்து வந்து நம்மை அடிமை படுத்தியிருந்த ஆங்கிலத்தை அரவணைப்பீங்க’ என்றும் தெரிவித்துள்ளார்.
ஆர்த்தியின் இந்த டுவிட்டுக்களுக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்களை மாறி மாறி பதிவு செய்து வருகின்றனர்.
நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு?? பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்... ??
— Actress Harathi (@harathi_hahaha) September 8, 2020
ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு..?? அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம்... இந்தி பட வாய்ப்பு வந்தால் t. Shirtயை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை ??????
இந்திய மொழிகளில் ஒன்று இந்தி அது வேண்டானு எதிர்பீங்க ஆனா எங்கேயோ இருந்து வந்து நம்மை அடிமை படுத்தியிருந்த ஆங்கிலத்தை அரவனைப்பீங்க....???????? https://t.co/VShp8wyWN4
— Actress Harathi (@harathi_hahaha) September 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments