நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்.. மாப்பிள்ள யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் ’எங்கேயும் காதல்’ ‘வேலாயுதம்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ’சேட்டை’ ’சிங்கம் 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த ஐம்பதாவது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது அவரது குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்து திருமணம் என்றும் கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் தான் ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை என்று கூறப்படுகிறது. ஹன்சிகாவின் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments