ஹன்சிகாவின் வருங்கால மாப்பிள்ளை இந்த தொழிலதிபரா? திருமண தேதி குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Monday,October 31 2022]

தமிழ் சினிமாவில் விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா பிரபல தொழிலதிபரை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை ஹன்சிகா தமிழில் ஜெயம் ரவி நடித்த ’எங்கேயும் காதல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ’மாப்பிள்ளை’ ’வேலாயுதம்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ’சிங்கம்-2’ ’பிரியாணி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் தற்போது அவர் ஆறு படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது பிசினஸ் பார்ட்னர் சோகேல் கதுரியா என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹன்சிகா மற்றும் சோகேல் ஆகிய இருவரும் சேர்ந்து பிசினஸ் ஒன்றை தொடங்கினார்கள். இந்த பிசினஸ் தற்போது நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை பிசினஸ் பார்ட்னராக இருந்த சோகேல், விரைவில் லைஃப் பார்ட்னராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை திருமண நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஹன்சிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.