உலக அதிசயங்களில் ஒன்றில் கணவருடன் ஹன்சிகா.. செம புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா சமீபத்தில் தனது தொழில் பார்ட்னரை திருமணம் செய்துகொண்ட நிலையில் கணவருடன் தற்போது உலகின் பல நாடுகளை சுற்றி தேனிலவை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றில் அவர் தற்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள் என்பதும், இதனை பார்ப்பதற்காக பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே அந்த வகையில் ஹன்சிகா தனது கணவருடன் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடு இருக்கும் பகுதிக்குச் சென்று அங்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அவை மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவதுடன் லைக்ஸ், கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறது.
நடிகை ஹன்சிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பிசினஸ் பார்ட்னரான கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments