உலக அதிசயங்களில் ஒன்றில் கணவருடன் ஹன்சிகா.. செம புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,January 09 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா சமீபத்தில் தனது தொழில் பார்ட்னரை திருமணம் செய்துகொண்ட நிலையில் கணவருடன் தற்போது உலகின் பல நாடுகளை சுற்றி தேனிலவை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றில் அவர் தற்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள் என்பதும், இதனை பார்ப்பதற்காக பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே அந்த வகையில் ஹன்சிகா தனது கணவருடன் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடு இருக்கும் பகுதிக்குச் சென்று அங்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அவை மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவதுடன் லைக்ஸ், கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறது.

நடிகை ஹன்சிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பிசினஸ் பார்ட்னரான கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

எவிக்சனுக்கு பிறகு ரக்சிதாவின் முதல் பதிவு.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

 பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் கடந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் ரக்சிதா வெளியேறுவார் என்று யாருமே எதிர்பாராத நிலையில்

ரசிகர்களின் மோசமான கமெண்ட்ஸ்-க்கு தரமான பதிலடி கொடுத்த நீலிமா ராணி!

தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை நீலிமா ராணி குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருகிறார் என்பதும் தேவர் மகன்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து அதன் பிறகு மெட்டி ஒலி, கோலங்கள்,

'வாரிசு' படத்தில் யார் யாருக்கு எவ்வளவுக்கு சம்பளம்? கசிந்த தகவல்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 225 கோடி என்றும்

விஜய், அஜித்துக்கு அது செட்டாகாது.. மைக் மோகன் கருத்து!

 சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினி ஒருவருக்கு மட்டுமே என்றும் அந்த பட்டம் விஜய் அஜித்துக்கு செட் ஆகாது என நடிகர் மைக் மோகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் 6: ஏழு போட்டியாளர்களில் பணப்பெட்டியை யார் எடுக்க வாய்ப்பு?

 பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு கட்டத்தில் இருக்கும் நிலையில் இன்னும் ஒரே ஒரு வாரத்திற்கு பின்னர் இறுதி நிகழ்ச்சி நடைபெறும் . இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் பணப்பெட்டி அனுப்பப்படும்