திருமணத்திற்கு பின்னரும் பிகினி போஸ்.. ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Sunday,August 13 2023]

நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் பிகினி போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா என்பதும் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்பூரில் தனது நீண்ட நாள் காதலரான சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஹன்சிகா துருக்கி நாட்டில் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு இருந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் துருக்கியில் உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் பெற்று வருகிறது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் திரையுலகில் பிஸியாக இருக்கும் ஹன்சிகா தற்போது ’பார்ட்னர்’ ’கார்டியன்’ உட்பட ஏழு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது