கொலை வழக்கில் சிக்கிய நடிகர் தர்ஷன்.. சிறைக்கு சென்று திருமண பத்திரிகை கொடுத்த பிரபல நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் நிலையில் அவரை சிறையில் சந்தித்த பிரபல நடிகை ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், ரேணுகா சாமி கொலை வழக்கில் தனது ரசிகர் ஒருவரை அடித்து கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை சோனல் தனது வருங்கால கணவர் இயக்குனர் சுதிர் அவர்களுடன் சேர்ந்து பெங்களூரு சிறைக்கு சென்று நடிகர் தர்ஷனுக்கு தங்களது திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இயக்குனர் சுதீர் மற்றும் நடிகை சோனல் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்த நிலையில் இவர்களது திருமணத்தை இரு தரப்பு பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கியதே நடிகர் தர்ஷன் தான் என்று கூறப்படுகிறது. அந்த நன்றி கடனுக்காக முதல் திருமண அழைப்பிதழை இருவரும் சேர்ந்து தர்ஷனுக்கு கொடுத்துள்ளதாகவும் திருமணத்திற்கு கண்டிப்பாக வர முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.
திருமண அழைப்பிதழ் பெற்றுக் கொண்ட தர்ஷன் முடிந்தால் திருமணத்தில் கலந்து கொள்கிறேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபல நடிகை ஒருவர் தர்ஷனை சிறைக்கு சென்று சந்தித்து தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பிதழ் கொடுத்துள்ள செய்தி கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments