கணவருடன் குத்தாட்டம் போடும் விஜய் பட நாயகி… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “சச்சின்“ திரைப்படத்தில் ஷாலினியாக நடித்த கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்திருக்க முடியாது.
அதைவிட நடிகர் ஜெயம்ரவியுடன் நடித்த “சந்தோஷ் சுப்பிரமணியம்” திரைப்படத்தில் வரும் ஹாசினி காதாபாத்திரமும் தமிழ் இளசுகளின் நெஞ்சில் நச்சென்று ஒட்டிக்கொண்டது. அந்த அளவிற்குத் தன்னுடைய க்யூட் ரியாக்ஷன் மற்றும் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். தமிழ் சினிமாவைத் தவிர தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்து பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.
மேலும் மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழி சினிமாக்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காத இவர் தற்போது கணவருடன் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும் படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
நடிகை ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் ஜோடிக்கு 2 அழகான ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் ஜெனிலியாவின் குணம் மற்றும் அவருடைய பழக்க வழக்கங்களால் இன்றைக்கும் ஒரு சுட்டிப் பெண்ணாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தனது கணவருடன் குட்டி உடையை அணிந்துகொண்டு டான்ஸ் ஆடியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com