திருமணத்திற்கு பின் மீண்டும் ரீ எண்ட்ரி ஆன விஜய் நாயகி

  • IndiaGlitz, [Thursday,August 13 2015]

ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ஜெனிலியா விஜய் நடித்த 'சச்சினி, வேலாயுதம்' உள்பட பல தமிழ் படங்களிலும், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜெனிலியாவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண்குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் ஜெனிலியா தற்போது ரீஎண்ட்ரி ஆகியுள்ளார்.

முதலில் ஜெனிலியா நடிக்க ஒப்புக்கொண்டது ஒரு விளம்பரப்படம் என்றும், இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு பாங்காங் நகரில் நடப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மூன்று வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்ததில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் இந்த நாள் மிக நல்ல நாளாக அமையும் என உணர்கிறேன்' என்றும் ஜெனிலியா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஜெனிலியாவுக்கு அவருடைய கணவர் ரித்தேஷ் தேஷ்முக் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெனிலியா 'இட்'ஸ் மை லைஃப்' , 'ராக் த ஷாடி', மற்றும் 'ஹூக் யா க்ரூக்' ஆகிய மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.