பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி காலமானார்....!

  • IndiaGlitz, [Monday,June 28 2021]

தமிழ் சினிமாவிற்கு சந்திரலேகா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் ஜெமினி ராஜேஷ்வரி. நடனத்தால்  மிகவும் புகழ்பெற்ற இவர் சுமார் 400-க்கும் அதிகமான படங்களில் தன் நடனவித்தையை வெளிப்படுத்தியுள்ளார்.  அந்த கால படங்களான கமலின் 16 வயதினிலே, பாக்யராஜின் சின்ன வீடு, மண்வாசனை  உள்ளிட்டவை முதல், தற்கால படங்களான வேலைக்காரன், எதிர்நீச்சல், கயல் போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரின் இறப்பிற்கு திரையுல பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.