மழைநீர் வாய்க்காலில் மீட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று காலை சென்னை வளசரவாக்கம் பகுதியில் மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை அழுதபடி இருந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது தெரிந்ததே
இந்த குழந்தையை வாய்காலில் இருந்து சின்னத்திரை நடிகை கீதா என்பவர் உயிருடன் மீட்டார். தொப்புள்கொடி கூட அறுக்கப்படாமல் அந்த குழந்தையின் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றியிருந்ததை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் சிறிது நேரம் உறைந்து போயினர்
இந்த நிலையில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட அந்த குழந்தைக்கு முதலுதவி செய்து அதன் பின்னர் வெந்ரீரில் குளிப்பாட்டிய நடிகை கீதா பின்னர் காவல்துறையினர் உதவியுடன் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்தார். தற்போது அந்த குழந்தை நல்ல உடல்நலத்துடன் உள்ளது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தில் இந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளதால் அந்த குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் வைத்துள்ளதாகவும், தனது மகளுக்கு திருமணமாகி 7 வருடங்களாக குழந்தை இல்லாததால் இந்த குழந்தையை தானும் தனது மகளும் வளர்க்க ஆசைப்படுவதாகவும், இந்த குழந்தை தங்களுக்கு கிடைக்குமேயானால் அதை நல்ல முறையில் வளர்ப்பதற்கு தயாராக இருப்பதாகவும் சின்னத்திரை நடிகை கீதா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout