நடுங்கிய படியே மலையேற கற்றுக்கொள்ளும் தமிழ் நடிகை… அசத்தலான வீடியோ

  • IndiaGlitz, [Monday,July 17 2023]

தமிழ் சினிமாவில் பக்கத்து வீட்டு பெண் போல அலட்டிக்கொள்ளாமல் நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் இளம் நடிகை ஒருவர் மலையேறக் கற்றுக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி இருக்கிறது.

நடிகர் விஜய்சேதுபதி நடித்திருந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். இவர் ‘ரம்மி‘, ‘புரியாத புதிர்‘, ‘ஒத்த செருப்பு’, ‘ஒல நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’, ‘சீதக்காதி‘, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘துக்ளக் தர்பார்’ என்று பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அலட்டிக் கொள்ளாமல் இயல்பான இவருடைய நடிப்பு தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் சீனு இராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்த ‘மாமனிதன்’ திரைப்படத்தில் இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு பல சர்வதேச விருதுகள் குவிந்த நிலையில் கடந்த வாரம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட்டு அதில் நடிகை காயத்ரி சங்கருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தமிழ் சினிமா ரசிகர்களிடையே திறமையான நடிப்புக்காக வரவேற்பை பெற்றிருக்கும் இவர் தற்போது மலையேறும் பயிற்சியான Mount climbing இல் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர் மேலே சென்றபோது என் கைகள் வியர்த்தன. மேலும் காலை தூக்குவதற்கு கூட பயந்தேன்.

ஆனால் சிறிய வயதில் மரம் ஏறுவதற்கும் சுவர் ஏறி குதிப்பதற்கும் கொஞ்சம் கூட பயப்படவே இல்லை என்று நடிகை காயத்ரி சங்கர் தன்னுடைய மலையேற்ற அனுபவம் குறித்து பேசியிருக்கும் கருத்துகளும் வீடியோவும் தற்போது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.