ஒரு இரவுக்கு ரூ.2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகையின் சாட்டையடி பதில்

  • IndiaGlitz, [Thursday,December 13 2018]

சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. நடிகைகளும் இந்த விஷயத்தை தைரியமாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை நேஹா சமூக வலைத்தளங்கள் மூலம் படுக்கைக்கு தன்னை அழைத்த நபரை அடையாளம் காட்டி வறுத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாள தொலைக்காட்சி தொடர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நடிகை காயத்ரியிடம் ஒருவர் வாலாட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் காயத்ரியிடம் 'ஒரு இரவுக்கு ரூ.2 லட்சம் தருகிறேன், வருகின்றீர்களா? என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த நடிகை அதனை தன்னுடைய பேஸ்புக்கில் பதிவு செய்து 'உங்கள் தாய் மற்றும் சகோதரி பாதுகாப்பிற்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்' என்று பதிவு செய்துள்ளார். காயத்ரியின் இந்த சாட்டையடி பதிலடிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More News

2வது டெஸ்ட்டில் ரோஹித், அஸ்வின் நீக்கம்! இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி கடந்த 6ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

'நாடோடிகள் 2' படத்தை அடுத்து மீண்டும் ஒரு 2ஆம் பாக படத்தில் சமுத்திரக்கனி

கடந்த 2009ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நாடோடிகள் 2'

இஷா அம்பானி திருமண நிகழ்ச்சியில் ரஜினி: சிறப்பான வரவேற்பு

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் நேற்று மும்பையில் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த திருமணத்தின் நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருந்த

ஆரவ்வுடன் இணைந்த ஓவியா! ஆர்மிகள் அதிருப்தி

பிக்பாஸ் புகழ் ஓவியா, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற ஆரவ்வை காதலிப்பதாக கூறப்பட்டது.

பிரபல தமிழ் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா' நடித்த 'நோட்டா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.