பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய மேலும் ஒரு நடிகை: அப்ப யார் தான் போட்டியாளர்கள்?

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் கடைசி புரமோவும் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். கடைசியாக கிடைத்த தகவலின்படி இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ரேகா, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, அனுமோகன், ஜித்தன் ரமேஷ், ஆஜித், கேப்ரில்லா, பாடகர் வேல்முருகன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த கிரண், ஷில்பா மஞ்சுநாத், பூனம் பஜ்வா, விஜே அர்ச்சனா, சம்யுக்தா, உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்சேதுபதியுடன் 7 படங்களில் ஜோடியாக நடித்த காயத்ரி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி காயத்ரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருசில திரை நட்சத்திரங்கள் மற்றும் விஜய் டிவியில் பிரபலமானவர்கள் மட்டுமே போட்டியாளர்களாக உள்ளனர். இவர்களை வைத்து விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை எப்படி பிரபலப்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கிழிந்த டவுசர், பட்டன் போடாத சட்டை: என்ன ஆச்சு மணப்பெண் வித்யூலேகாவுக்கு?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்த 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற திரைப்படத்தில் சமந்தாவுக்கு தோழியாக அறிமுகமானவர் நடிகை வித்யூலேகா.

மீண்டும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம்: காந்த கண்ணழகி கேரக்டரில் யார்?

கடந்த 1979ஆம் ஆண்டு சிவகுமார் நடித்த 'வண்டிச்சக்கரம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமான சில்க் ஸ்மிதா அதன் பின்னர் கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

பிங்க் நிற உடை, குட்டி தேவதையுடன் ஆல்யா: வைரலாகும் முதல் போட்டோஷூட்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஆல்யா மானசா

அக்கரையில் இருப்போரின் ஆதரவும் இபிஎஸ்க்கே… வேட்பாளர் தகுதியும் இவருக்கே… குதூகலிக்கும் தொண்டர்கள்!!!

தமிழகத்தில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் குறித்த சர்ச்சை சில தினங்களாக கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

169 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட கழிவறை… எதுக்கு இத்தனை காஸ்ட்லி தெரியுமா???

சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான பொருட்களை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பி வைத்திருக்கிறது.