பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்சேதுபதியுடன் 7 படங்களில் நடித்த நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கிரண், ரேகா, ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, விஜே அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்பட ஒருசில பெண் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல் நடிகர் அனுமோகன், நடிகர் ஆரி, ஜித்தன் ரமேஷ், நடிகர் சுரேஷ், சூப்பர் சிங்கர் ஆஜித், பாடகர் வேல்முருகன் ஆகியோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் தற்போது ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷில்பா மஞ்சுநாத், லட்சுமிமேனன், அமிருதா ஐயர் ஆகியோர் கலந்து கொள்வதாக செய்திகள் வெளிவந்து அதன்பின்னர் இந்த செய்திகள் சம்பந்தப்பட்டவர்களால் மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக விஜய்சேதுபதியுடன் 7 படங்களில் நடித்த நடிகை காயத்ரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தில் அறிமுகமாகிய நடிகை காயத்ரி அதன் பின்னர் ‘ரம்மி’ ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ’புரியாத புதிர்’ ’சீதக்காதி’ ’சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ’மாமனிதன்’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதியின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்சேதுபதியுடன் நடித்த இளம் நடிகை ஒருவர் திடீரென களமிறக்கப்படுவது அந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com