ஆ ராசாவின் சர்ச்சை பேச்சு: கண்கலங்கிய முதல்வருக்கு ஆறுதல் கூறிய தமிழ் நடிகை!
- IndiaGlitz, [Tuesday,March 30 2021]
சமீபத்தில் திமுக எம்பி ஆ ராசா அவர்கள் முதல்வரின் தாயார் குறித்தும், முதல்வரின் பிறப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பெரும் பிரச்சனை எழுந்தது. இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று தனது பேச்சுக்கு முதல்வரிடம் வருத்தம் தெரிவித்தும் மன்னிப்பு கேட்டும் அறிக்கை ஒன்றை ஆ ராசா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த பிரச்சனை இன்னும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய தாயாரை ஆ ராசா இப்படி பேசி விட்டாரே என கண் கலங்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கண்கலங்கி வருத்தமடைந்த முதல்வருக்கு ஆறுதல் கூறும் வகையில் தமிழ் நடிகை கௌதமி தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
அண்ணன் எடப்பாடி பழனிசாமி, தங்களின் காலம் சென்ற தாயார் தவசாயி அம்மாள் அவர்களை, திமுகவின் மூத்த தலைவர் இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. தரக்குறைவான புண்படுத்தும் அவரின் பேச்சு அதிர்ச்சியையும் கோபத்தையும் அளிக்கிறது. ஒரு மகனாக நீங்கள் உணரும் வலியினை, உங்கள் உடன் பிறவா சகோதரிகளாக நாங்களும் உணர்கிறோம்.
ஒரு நியாயமான சமூகத்தின் அடிப்படை அம்சமே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், குரலற்றவர்களுக்கும் மதிப்பையும் சமூக பாதுகாப்பையும் அளிப்பதே நம் வீடுகளில் பொக்கிஷங்களாக மதிக்கப்படும் தாய்மார்களையும், சகோதரிகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசிவரும் திமுக தலைவர்களால் எப்படி அனைவருக்கும் பாதுகாப்பான நியாயமான நல்லாட்சியை வழங்க முடியும்? எந்தவிதமான சமூக பாதுகாப்பு உறுதியைக் கொடுத்துவிட முடியும்?
பெண்களை இழிவுபடுத்துவோர்க்கு அரசியலில் ஒருபோதும் இடம் கிடையாது என்பதை தாய்மார்கள், அக்கா, தங்கைகள், பெண்கள் ஆகியோர்களை மதிக்கும் ஒவ்வொருவரும் நிரூபித்து காண்பிப்பர். இப்படிப்பட்டவர்களை பொறுப்பான பதவிகளுக்கு வரவிடாமல் தடுப்பது நம் சமூக கடமையும் கூட என்று பதிவு செய்திருந்தார். மேலும் கெளதமி தனது டுவிட்டில் #திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மகனாக நீங்கள் உணரும் வலியினை, உங்கள் உடன் பிறவா சகோதரிகளாக நாங்களும் உணர்கிறோம்.
— Gautami Tadimalla (@gautamitads) March 30, 2021
ஒரு நியாயமான சமூகத்தின் அடிப்படை அம்சமே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், குரலற்றவர்களுக்கும் மதிப்பையும் சமூக பாதுகாப்பையும் அளிப்பதே.
(2/5)
பெண்களை இழிவுபடுத்துவோர்க்கு அரசியலில் ஒருபோதும் இடம் கிடையாது என்பதை தாய்மார்கள், அக்கா, தங்கைகள், பெண்கள் ஆகியோர்களை மதிக்கும் ஒவ்வொருவரும் நிரூபித்து காண்பிப்பர். இப்படிப்பட்டவர்களை பொறுப்பான பதவிகளுக்கு வரவிடாமல் தடுப்பது நம் சமூக கடமையும் கூட.
— Gautami Tadimalla (@gautamitads) March 30, 2021
(4/5)#AntiWomenDMK
#எங்களண்ணன்_எடப்பாடியார் #திமுக_வேணாம்_போடா #WeAreWithYouEPS #RejectDMK #SayNoToDMK
— Gautami Tadimalla (@gautamitads) March 30, 2021
(5/5)
அண்ணன் @EPSTamilNadu , தங்களின் காலம் சென்ற தாயார் தவசாயி அம்மாள் அவர்களை, திமுகவின் மூத்த தலைவர் இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. தரக்குறைவான புண்படுத்தும் அவரின் பேச்சு அதிர்ச்சியையும் கோபத்தையும் அளிக்கிறது. (1/5)
— Gautami Tadimalla (@gautamitads) March 30, 2021