தேசியகீதம் குறித்து நடிகை கவுதமியின் கருத்து
- IndiaGlitz, [Wednesday,October 25 2017]
திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்புவது கட்டாயம் என்பது தேவையா? தேசிய கீதம் ஒளிபரப்பும்போது எழுந்து நிற்க வேண்டியது அவசியமா? என்று நீதிமன்றம் முதல் பல இடங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 'நாட்டுப்பற்றை நாட்டு மக்களிடையே உத்தரவுகள் மூலம் கற்பிக்க முடியாது, திரையரங்குகளில் தேசியகீதம் ஒளிபரப்பும்போது எழுந்து நிற்காதவர்களுக்கு நாட்டுப்பற்று குறைவு என்று கருத முடியாது என்றும், இதுகுறித்து மக்களுக்கு கொள்கையை போதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்த விஷயத்தில் நடிகர் கமல்ஹாசன் கூட நேற்று இரவு தனது டுவிட்டரில், 'எனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகை கவுதமி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, 'தேசியகீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது நமது கடமை. நம்முடைய பாதுகாப்பிற்காக இரவும் பகலும் பாடுபடும் நமது ராணுவ வீரர்களுக்கும் நமது நாட்டிற்கும் நாம் செய்யும் மரியாதை இது' என்று கூறியுள்ளார்.