தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது. காஷ்மிர் விவகாரம் குறித்து பிரபல நடிகை
- IndiaGlitz, [Sunday,August 11 2019]
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த 370வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது. இதுகுறித்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. எனவே வரும் அக்டோபர் மாதம் இம்மாநிலம் முறைப்படி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது
காஷ்மீரில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் திரையுலகினர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய திரையுலகினர்கலும், சர்வதேச திரையுலகினர்களும் இனி அதிகமாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலான திரையுலகினர் காஷ்மீர் குறித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தபோதிலும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கெளதமி திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் காஷ்மீரில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்கையில், 'காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பாஜகவில் இணைவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்