மகளுக்கு பெயரை மாற்றுகிறாரா நடிகை கெளதமி? என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கெளதமி தனது ஒரே மகள் சுப்புலட்சுமியை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் இதற்காக அவரது பெயரை மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்தவர் கௌதமி என்பதும் தற்போது அவர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் அதிமுகவில் இணைந்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் கௌதமியின் ஒரே மகள் சுப்புலட்சுமி படித்து பட்டம் பெற்ற நிலையில் அவர் லண்டனுக்கு சென்று நடிப்பிற்கான ஆறு மாத கோர்ஸ் ஒன்றை முடித்து சென்னை திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.
அநேகமாக அவரது சினிமா என்ட்ரி அடுத்த வருடம் நிச்சயம் என்றும், சினிமாவுக்காக அவரது பெயர் மாற்றம் செய்யப்படும் தெரிகிறது. மேலும் அவர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் நாயகியாக அறிமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com