10கிமீ வேன் ஓட்டி வந்த நடிகை கவுதமி...! இதெல்லாம் பாஜக முருகனுக்காகவாம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தாராபுரத்தில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை ஆதரித்து, நடிகை கவுதமி 10கிமீ வேன் ஓட்டி வந்து பிரச்சாரம் செய்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக எல்.முருகன் களமிறங்குகிறார். இவருக்கு ஆதரவாக நடிகை கவுதமி பிரச்சாரம் செய்தார். அதிமுக மேற்கு ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த பிரச்சார வேனில் தனியாக 10-கிமீ ஓட்டிச்சென்று பரப்புரை செய்தார் கவுதமி. அப்போது அதிமுக-பாஜக கூட்டணி தொண்டர்கள் இவரை பட்டாசு வெடித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர்.
தாராபுரம் மருத்துவமனை அருகே கவுதமி பேசியிருப்பதாவது,
"பாஜக வெற்றி பெற்றால், அரசு கலை,அறிவியல் கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி தாராபுரத்தில் அமைக்கப்படும். இங்குள்ள அரசு மருத்துவமனையில் தரத்தை உயர்த்துவோம். ஈரோடு-தாராபுரம்-பழனி ரயில்வே திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டைஇலை தான், இங்கு தாமரையாக மலர்ந்து இருக்கின்றது. அதனால் பாஜக ஆதரவாளர் முருகனை நீங்கள் வெற்றிபெறச்செய்யுங்கள்.
திமுக-வின் கூட்டணி கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெண்களை பற்றி இழிவாக பேசியுள்ளார். அவர் கூறியதை சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. அதனால் அக்கட்சியை புறக்கணித்து விட்டு, தாமரைக்கு வாக்களித்தீர்கள் என்றால் அடுத்து 5 வருடங்கள் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு இருக்கும்" என்று கூறி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com